Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி/நாளை என்பது நமக்கில்லை

நாளை என்பது நமக்கில்லை

நாளை என்பது நமக்கில்லை

நாளை என்பது நமக்கில்லை

ADDED : செப் 29, 2009 03:04 PM


Google News
Latest Tamil News
நாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம். இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச் செய்யலாம் என்று என்று நினைக்கிறோம். இதையே ஆன்மிகத்திலும் மனிதர்கள் செய்கிறார்கள். இளமையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம். வயதான பிறகு பகவானை நினைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். முதுமையில் நாம் சரியாக பார்க்கவே முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும். பகவானின் நாமங்களை சொல்ல விரும்பினாலும், ஜபிப்பதற்கு சக்தி இல்லாமல் போய் விடும்.<br>சில மாணவர்களும் இவ்வாறு தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடத்தை விட்டுவிட்டு, பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண்ணுகிறார்கள். காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் படிப்பதால் குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால், தேர்வில் தோல்வி அடைகிறார்கள்.<br>மனப்பக்குவம் அடைய விரும்பும் ஒருவன் 'நாளை' பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அதற்கான முயற்சிகளை 'இன்றே' ஆரம்பிக்க வேண்டும்.<br><br>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us